பூஞ்சோலை கிராமமாம் எங்கள் புன்னாலைக்கட்டுவன்
புல் வெளியும், புனிதத்தலமும் பூத்துக்குலுங்கும் நகரமது
பச்சைப் பசேலென படர்ந்த செடிகளும், பனைகளும்,தென்னைகளும்
பார்பவரை கொள்ளை கொள்ளும் பசுமையான ஊரிலே
படுத்துக்கிடக்கிறார்களே பாள்பட்டுபோவார் பார்ப்போம் பார்ப்போம்
படாதபாடு படுத்தியவர் பாடையிலே போவார் படைபட்டாளத்துடன்
*கவிப்புலி
தமிழ் என் மூச்சு தமிழீழம் எம் பேச்சு
தமிழா உனக்கென ஆச்சு தடுக்காதே இனி எம் தாயக வீச்சு
தரணியெங்கும் தமிழர் ஒன்று சேர்ந்தாச்சு
தலைவன் பொறுமை எல்லையும் தாண்டியே போயாச்சு
தமிழர் படை போராட்டம் உக்கிரமாச்சு
தனிமையாக வாழ்வது தான் தலைவிதி என்றாச்சு
தங்களின் துயரையும் தாண்டி தலைவனோடு சேர்ந்தாச்சு
தரணியெங்கும் தடைகளை அகற்றுவதென்றாச்சு
தமிழீழ விடிவை தடுப்பவர் தலைகள் தவிடுபொடியாச்சு
தமிழ் என் மூச்சு தமிழீழம் எம் பேச்சு
**கவிப்புலி
*